ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் (தலவாக்கலை) டெவன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முறிந்த மரத்தை அகற்றும் பணிகளை பிரதேச மக்களின் உதவியுடன் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்ரனர் தற்சமயம் ஒருவளி போக்குவரத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா.




