Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் தீர்கமான முடிவு இல்லை – அ.அரவிந்தகுமார்
மலையகம்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் தீர்கமான முடிவு இல்லை – அ.அரவிந்தகுமார்

ThanaBy ThanaDecember 25, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலே இந்த நாட்டில் நடைபெற விருக்கின்றது அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார்.

இன்றைய தினம் பதுளை/ தெல்பெத்த இல 1 தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதால் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்றது. அதேவேளை பாராளுமன்றத்தை பொறுத்தவரை அதன் பதவிகாலம் 2025 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் வரை இருக்கின்றது.

ஆகவே அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே அடுத்த வருட இறுதியிலே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நிச்சயமாக நடக்கும்.

இந்த ஜனாதிபதி தேர்தலிலே யாரை ஆதரிப்பது என இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் இதுவரையில் யார் யார் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்க போகிறார்கள் என தெரியாது. எனவே களமிறக்கப்பட்ட பின்னர் தான் நான் யாரை ஆதரிப்பது என தீர்மானிப்பேன்.

நாடளாவிய ரீதியில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் பல்வேறு நாசகார செயல்களை நாங்கள் தடுக்க கூடியதாக இருக்கின்றது. விஷேடமாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலே சிக்கியுள்ளதை நாம் தினமும் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் மிகுந்த அக்கறை காட்டி செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பு ஆகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.