மாலம்பே கஹந்தோட்ட பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பிள்ளைகள் 09, 08 மற்றும் 07 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் நேற்று (30) இடம்பெற்றன.
மனவேதனையின் காரணமாக நேற்றிரவு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதுடன் தாய் மாலம்பே வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
