மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.04.01.2024.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் இன்று சகல மரக்கறிகளும் இவ்வாறான விலைக்கு விற்கப்பட்டது.
கத்தரிக்காய் கிலோ ஒன்று 640/=ரூபாவாகவும் போஞ்சி கிலோ ஒன்று 960/= ரூபாவாகவும் பச்சை மிளகாய் கிலோ ஒன்று 2100/= ரூபாவாகவும் ஈர பிழாக்காய் ஒன்று 240/= ரூபாவாகவும் முட்டை கோவா கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் கேரட் கிலோ ஒன்று 960/=ரூபாவாகவும் தக்காளி கிலோ ஒன்று 800/=ரூபாவாகவும் பீட் கிலோ ஒன்று 720/= ரூபாவாகவும் மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
என்றுமே இல்லாத வாறு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளது.
இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


