மாத்தளை இறத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க விசேட கூட்டம் நாளை (14.012024) ஞாயிறுக்கிழமை முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இறத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறும்.
அன்றைய தினம் சங்கத்தின் யாப்பு மற்றும் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட பதவி நிலைகள். நிர்வாக சபையினால் அப்பதவிகளுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் நடப்பாண்டுக்கான புதிய வேலைத் திட்டங்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்றன இடம் பெறவுள்ளன.
எனவே இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொதுச் செயலாளர் சண்.பிரபாபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
