லிந்துலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த தோட்டத்தில் வசித்து வரும் இவர் தனது வீட்டு தோட்டத்தின் பாதுகாப்பிற்காக மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும் இன்று காலை தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர். இறந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையும் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியரும் ஆவார்.
குறித்த நபரின் தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி மற்றும் நீர் பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஆகியவற்றுக்கான மின் இணைப்பில் ஏற்பட்டிருந்த கசிவினை அவதானிக்காது செயல்பட்டதன் காரணமாகவே மின்சாரம் தாக்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
