தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 12 மணியளவில் தரம் 10 ஐச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் உட்பட பாடசாலை ஊழியர் ஒருவரும் மேலும் ஒரு முதியவர் ஒருவரும் பாடசாலைக்கு வெளியில் உள்ள வீதியால் சென்று கொண்டிருந்த வேளையில் களைந்து வந்த குளவிகள் இவர்களைத் தாக்கியுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான அறுவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டுக்கு இலக்கானோரில் முதியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

