சிவனொளிபாதமலை யாத்திரயர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட போருந்து சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர்.தர்மஶ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்தார்.
இதன் படி ஒவ்வொரு 26 திகதி இன்று வெள்ளிகிழமை மாலை. 4.30 மணிக்கு பலாங்கொடையில் இருந்து புறப்படும் பேருந்து பொகவந்தலாவ வீதியின் ஊடக நோர்வூட் பிரதான நகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் நல்லதண்ணியை சென்றடையும் என தெரிவித்தார்.
மீண்டும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லதண்ணியில் இருந்து புறப்படும் பேருந்து நோர்வூட் பொகவந்தலாவ பிரதான நகரம் ஊடக பிற்பகல் 12.30 மணியளவில் பலாங்கொடை பிரதான பேருந்து நிலையத்தை வந்தடையும் என அவர் தெரிவித்தார்.இந்த பேருந்து சேவை வெள்ளிகிழமைகளிள் இடம் பெரும்.
