குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோர்களை கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேம பி. தென்னகோன் குருநாகல் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பொலிஸாருக்கு குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.
குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் சில நாட்களுக்கு முன் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.
இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
