‘யுக்திய’ சுற்றிவளைப்பில், ரூ. 10 கோடிக்கும் அதிக பெறுமதியான 192,000 போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை, எந்தரமுல்லை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த போதைமாத்திரைகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 192,000 எண்ணிக்கையிலான 150mg மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக எந்தரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
