நேற்றையதினம் (03) முன்னெடுக்கப்பட்ட 569 சுற்றிவளைப்புகளில் 562 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் உள்ளிட்ட 567 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 06 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகணத்தில் 317 சுற்றிவளைப்புகளில் 313 ஆண்களும் 04 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 54 சுற்றிவளைப்புகளில் 52 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், பிடிவிறாந்து பட்டியலில் உள்ள 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
