கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் நிலைய பொறுப்பதிரிகாரி உறுதிப்படுத்தினார்.
லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகளுக்காக தற்போது தம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இரு சிறார்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளார், பத்தனை பகுதியில் உள்ள தமது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே அவர்கள் வளர்ந்து வந்துள்ளனர். அத்துடன், மது அருந்திவிட்டுவந்து தமது மருகமன், பேரக்குழந்தைகளை கொடுமைப்படுத்திவருவதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் தாத்தா தெரிவித்தார்.
தமது மகன்மாரை தாக்கி கடுமையாக தாக்கி அதனை தந்தை ஒளிப்பதிவு செய்யும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
