Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் தொடர்ந்தும் வட்டியில்லாக் கடன்
இலங்கை

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் தொடர்ந்தும் வட்டியில்லாக் கடன்

ThanaBy ThanaFebruary 8, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும்  வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுக்கொள்வதுடன் தற்போது அந்த நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய  அமைச்சர்; தற்போதைய ஜனாதிபதி 2017ஆம் ஆண்டில் இக்கடன் யோசனை முறையை ஆரம்பித்தார். ஏழாவது குழுவினர்  இம்முறை உள்ளெடுக்கப்படுவர்.

தற்போது வரை 6 குழுக்கள் நிறைவு செய்துள்ளன. அண்ணளவாக  5000 பேரளவில் தனியார் பல்கலைக்கழகங்களில்  வட்டியில்லாக் கடன் வசதிகளை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக பிள்ளைகளுக்கு பட்டம் பெறுவதற்கு வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையை  இதற்கு முன்னரும் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்தாலும் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமெபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளரும், இலங்கை வங்கியின் பிரதி  பிரதம முகாமையாளர் உட்பட பலரும், திறைசேரி அதிகாரிகளும், இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். இந்நிறுவனங்களுக்கு புதிதாக உள்ளெடுக்கப்பட்ட குழுவிற்கு கடன் வழங்காமை தாமதமாவதற்கு பிரதான காரணம் முதலாவது  மற்றும் இரண்டாவது  குழுவில் 200 பேரளவில் கடனை மீளச் செலுத்தாதிருப்பதாகும்.

முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் பட்டம் முடியும் போது கொரோனாத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நான் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. 200 என்றால் சராசரியாக பெரிய எண்ணிக்கை அல்ல. வங்கியின் மீளப்பெற்றுக்கொள்ளும் திணைக்களத்தினால் இது தொடர்பாக அறவீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக  பிணையாளிகள் இருவர் வங்கியினால் கோரி கடன் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடன் நிதி தொடர்பாக பூர்த்தி செய்து கடந்த வாரத்தில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் தனியார் பல்கலைக்கழகங்களின் மேலதிக செயலாளருக்கு ஊடக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்துவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.