தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையில் 187 KM பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்து.
விபத்தில் காயமடைந்த ரஷ்ய பிரஜைகளான சுற்றுலா பயணிகள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் நான்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
