மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.10.02.2024.
இன்று மதியம் 3.45.மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மவுஸ்சாகலை தோட்ட ரதபூட் பிரிவு பகுதியில் உள்ள சிவனொளிபாதமலை தொடர் வனப் பகுதியில் தற்போதைய நிலையில் சுமார் 3 எக்டேயர் கருப்பந்தைல மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் விஷமிகள் வைத்த தீயில் எரிந்த நிலையிலுள்ளது.
இந்த தீ தொடரும் பட்சத்தில் மேலும் பல ஹெக்டையர் வன பகுதி தீயினால் எரிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தீ வைப்பதால் வன ஜீவராசிகள் மற்றும் பறவைகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர் ஊற்றுகள் வற்றி போகும் என அப் பகுதியில் உள்ள முதியவர்கள் கூறுகின்றனர்.
