ஞான சார தேரரின் மன்னிப்பு கோரல் வேடிக்கையானது மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (முப்தி ) தெரிவிப்பு
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (முப்தி) ஞான சார தேரரின் மன்னிப்பு தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொது பல சேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்த ஞானசார தேரர் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மற்றும் தமிழ் சமூகத்திற்கும் எதிரான மனோ உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தும் கொலை மிரட்டல்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தி தற்பொழுது சட்ட சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையால் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கூறியுள்ளதா ஊடகம் மூலம் தெரிவித்துள்ளார் என்பது வேடிக்கையானது,
என்றும் அவர் உண்மையாக அப்படி மன்னிப்பு கூறுவாராயின் பகிரங்க மேடை போட்டு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இவரோடு இணைந்து செயல்பட்ட சில பொது அமைப்புக்கள் மற்றும் சில தேரர்கள் மன்னிப்பு கோர வேண்டும்.
எதிர்காலத்தில் அற்ப அரசியலுக்காக இந்த நாட்டிலே இனவாத மதவாத கருத்துக்களை ஏற்படுத்தி நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும் இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க வேண்டாம் இதற்கு நாட்டு மக்கள் யாரும் துணை போக வேண்டாம் என்று தெரிவித்த அவர் இந்த நாட்டு மக்கள் ஆகிய சிங்களவர்கள், தமிழர்கள் ,மற்றும் முஸ்லிம்கள் ,மலையர்கள் பரங்கியர்கள், அனைவரும் எந்த பிரிவினைகள் இல்லாமல் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டில் வாழ வேண்டும் என்றும் சர்வதேச டேஷ்போராக்களின் அஜந்தாக்களுக்கு அடிபணியாமல் இந்த அழகிய இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையாக முன் வர வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (முப்தி) தெரிவித்தார்.
