பசறை மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பசறை பொது மைதானத்தில் இடம்பெற்று வரும் வேளையில் மரமொன்றில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை தாக்கியதில் சுமார் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 மாணவர்கள் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 55 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் பசறை பொது வைத்தியசாலையின்பொருப்பதிகாரி ஜானக கல்கந்த தெரிவித்தார்.
