Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

August 14, 2026

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

August 14, 2026

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையான கொழும்பு கைரியா முஸ்லிம் கல்லூரியின் விளையாட்டு இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ விளையாட்டுச் சீருடை அறிமுக வைபவம்.
இலங்கை

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையான கொழும்பு கைரியா முஸ்லிம் கல்லூரியின் விளையாட்டு இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ விளையாட்டுச் சீருடை அறிமுக வைபவம்.

ThanaBy ThanaFebruary 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையான கொழும்பு கைரியா முஸ்லிம் கல்லூரியின் விளையாட்டு இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ விளையாட்டுச் சீருடை அறிமுக வைபவம்.

கைரியா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 11-ம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்  (21/02/2024) கொழும்பு 9ல் அமைந்துள்ள கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இலச்சினையும் விளையாட்டுப் போட்டியின் சீருடை மற்றும் வெற்றிக்கேடயங்கள் அறிமுக நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி ஏ எல் எஸ் நசீரா ஹசனார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிபர்
திருமதி ஏ எல் எஸ் நசீரா ஹசனார், பாடசாலையின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் குறிப்பிட்டதோடு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் சிறப்பு பெற இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக இருக்கும் என்றார்…

மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர் மற்றும் விளையாட்டுக்களுக்கான பொறுப்பாசிரியர் திருமதி பர்ஹானா அமிர்தீன் மற்றும் கல்லூரியின் விளையாட்டுத் தலைவர் செல்வி ரஷா சப்ராஸ் ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வை பிரதி மாணவ தலைவர் செல்வி சாரா நிலாம்டீன் தொகுத்து வழங்கியதோடு இந்நிகழ்வில் மாணவர் தலைவர் சாரா அரபாத்,
இல்லங்களின் தலைவர்களான ரஹமா பானு, ஜெஸ்மின் இப்திகார், அகிலா உசேன், பரஹா ஃபாரீட். ஆகியோருடன் மாணவர் தலைவர் செயற்குழு உறுப்பினர்களாகிய பிரதி மாணவத் தலைவர் கதீஜா இக்பால், சிரேஷ்ட மாணவ தலைவர் ஆயிஷா நவாஸ், பிரதி சிரேஷ்ட மாணவ தலைவர் அம்னா அரபாத் மற்றும் பாடசாலை ஊடகப் பிரிவின் தலைவர் சல்மா அசாட் ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், இப்பாடசாலையானது 140 வருட பாரம்பரிய சிறப்புடைய இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது…

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026

    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது; எதிர்க்கட்சியின் போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

    August 14, 2026

    போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் குவித்த கொழும்பைச் சேர்ந்த பெண் கைது

    August 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.