இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் சம்பள நிர்ணய சபைக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,700 ரூபா வழங்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமியபவனில் (23/02)இடம்பெற்றது.
