- பலாங்கொடை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து 170 பேர் திக்வெல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற சமயம் திக்வெல்ல கடற்கரையில் தங்கி இருந்த சந்தர்ப்பத்தில் கடலில் நீராடச் சென்ற சிலரில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இருவர் காணாமல் போய்யுள்ளனர். இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் பலாங்கொடை ராசகலை ஊவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய லகிரு குமார என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
M.F.M.Ali
