தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விசேட பொது போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கு கொழும்பு மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையம் ஆகியவற்றிலிருந்து பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
