கொலன்னாவை அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களம் புத்துயிர் பெறப் போகிறது. அதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த கடந்த வெள்ளிக்கிழமை (22) கொலன்னாவை அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்திற்கு கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்துகொண்டார்.
புதிய தொழில்நுட்பத்துடன் போட்டி சந்தையை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுப்பதே இந்த கண்காணிப்பு பயணத்தின் நோக்கமாக இருந்தது.
அங்கு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்று கூடி அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் சென்று பல குழுக்களாக அவதானித்து ஒவ்வொரு துறையின் தற்போதைய நிலைமை மற்றும் சாதகமான முன்மொழிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன்படி, கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் ஆய்வுக்குப் பிறகு, அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்திற்கான சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் வருடாந்த திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த திட்டத்தை உடனடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆனந்த விஜேசிங்கவிற்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களத்தின் தேக்கமடைவதற்குக் காரணம், அதன் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான விரிவான திட்டம் இல்லாததே என்பது கண்காணிப்புப் பயணத்தின் பின் நடந்த கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
நிறுவனத்தின் அனைத்து திணைக்களங்களுக்கும் உடனடியாக சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின்ன் அனுமதி பெற்ற அலுவலக ஊழியர்கள் 769 ஆக இருந்தாலும், தற்போது 311 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளின் தற்போதைய நிலைமை மற்றும் சாதகமான முன்மொழிவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள், நிறுவனப் பணிகளை மேற்கொள்வதில் ஊழியர்களின் வெற்றிடத்தினால் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கையை முன்வைத்து தேவைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்த முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் 1849 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து லாம்புச் சந்தியில் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியால் நிறுவப்பட்டது. 1928 ஆம் ஆண்டில், தற்போதைய கொலன்னாவ பிரதேசத்தில் அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து இயந்திர பொறியியல் வேலைகளையும் மேற்கொள்வதற்காக அரசாங்க வேலைத் திணைக்களம் இயந்திரவியல் பணிமனையாக நிறுவப்பட்டது. 1971 ஆம் ஆண்டு, அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் “ஏ” தரம் திணைக்களமாக நியமிக்கப்பட்டது.
தற்போது, அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு நீர் கட்டுப்பாட்டு கதவுகளை தயாரித்து, நிறுவி மற்றும் பராமரித்தல், தபால் திணைக்களத்திற்கு திகதி முத்திரைகள் மற்றும் திகதி கட்டைகளை தயாரித்து வழங்குகிறது, பொலிஸ் திணைக்களத்திற்கு இலக்கத் தகடுகள் மற்றும் சார்ஜென்ட் பட்டிகள் தயாரித்தல், மர தளபாடங்கள் தயாரித்து வழங்குதல், நீர் வழங்கல் சபைக்கு நீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைத்தல், அரச நிகழ்வுகளுக்கான வரவேற்பு மேடைகள் அமைத்தல், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இரும்பு பாலங்கள் உருவாக்குதல், நிறுவனங்களில் அறைகளை ஒதுக்கீடு செய்தல் (பெயர்ப்பலகைகள் செய்தல் மற்றும் பொருத்துதல், அரச நிறுவனங்களில் வாகன சேவை செய்தல் மற்றும் பராமரித்தல், இலங்கை புகையிரத சேவை சீனா சட்டி, பிரேக் பேட்கள் உட்பட சீனச்சட்டியால் செய்யப்பட்ட பொருட்களை தயாரித்து வழங்குதல், இலங்கை ரயில்வேக்கு வழங்குதல், மரம் மற்றும் இரும்பினால் ஆஸ்பத்திரி உபகரணங்களை தயாரித்தல், கொதிகலன் மற்றும் எரிவாயு குழாய் அமைப்புகளின் பராமரிப்பு தொழில்நுட்ப மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சிவழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு நீர் கட்டுப்பாட்டு கதவுகளை தயாரித்து, நிறுவி மற்றும் பராமரித்தல், தபால் திணைக்களத்திற்கு திகதி முத்திரைகள் மற்றும் திகதி கட்டைகளை தயாரித்து வழங்குகிறது, பொலிஸ் திணைக்களத்திற்கு இலக்கத் தகடுகள் மற்றும் சார்ஜென்ட் பட்டிகள் தயாரித்தல், மர தளபாடங்கள் தயாரித்து வழங்குதல், நீர் வழங்கல் சபைக்கு நீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைத்தல், அரச நிகழ்வுகளுக்கான வரவேற்பு மேடைகள் அமைத்தல், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இரும்பு பாலங்கள் உருவாக்குதல், நிறுவனங்களில் அறைகளை ஒதுக்கீடு செய்தல் (பெயர்ப்பலகைகள் செய்தல் மற்றும் பொருத்துதல், அரச நிறுவனங்களில் வாகன சேவை செய்தல் மற்றும் பராமரித்தல், இலங்கை புகையிரத சேவைக்கு செரமிக், பிரேக் பேட்கள் உட்பட செரமிக்கால் செய்யப்பட்ட பொருட்களை தயாரித்து வழங்குதல், மரம் மற்றும் இரும்பினாலான மருத்துவமனை உபகரணங்களை தயாரித்தல், கொதிகலன் மற்றும் எரிவாயு குழாய் அமைப்புகளின் பராமரிப்பு போன்றவைகளைச் செய்கின்றது. இது தொழில்நுட்ப மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சிவழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் திரு.டபிள்யூ.எஸ்.சத்யானந்த,
“கடந்த காலங்களில் சில காரணங்களால் அரசாங்க தொழிற்சாலை பின்னடைவை சந்தித்தது. கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி இதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தை தற்போதைய நிலையில் இருந்து மீட்டெடுக்க நாம் பாடுபட வேண்டும். அதற்கான புதிய திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வேலையை தனியாக செய்வது கடினம். அதற்கு, நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் ஆதரவு தேவை. அதனால்தான் இன்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் பங்காற்றிய ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சிறந்த காலம் 1960-70 ஆகும். திறந்த பொருளாதாரம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையினாலும், தனியார் துறையினரின் போட்டியினாலும் அரசாங்கத் தொழிற்சாலைகள் திணைக்களம் பின்னடைவைச் சந்தித்தது. அரசு நிறுவனம் என்பதால், போட்டித்தன்மையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்தப் போட்டியை எதிர்கொள்ளக் கூடிய அமைப்பாக நாம் மாறாவிட்டால், நாங்கள் இருக்க மாட்டோம். இந்த தொழிற்சாலையை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிறுவனம் சந்தைப்படுத்தலில் முன்னிலையில் நிற்க வேண்டும். இலாபகரமான நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறோம். அதற்காக தேவையான திட்டங்களை பிரிவுக்கு பிரிவு வகுக்கவும். தற்போதைய சந்தைக்கு பொருத்தமான விற்பனை ஊக்குவிப்பு திட்டத்தை அமைக்கவும். அதற்கு நாங்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குகிறோம்” என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், இணை நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், முகாமையாளர்கள் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
