Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்…
இலங்கை

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்…

ThanaBy ThanaMarch 31, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 6 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு பிரதேச ஆகிய  செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
“அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற அரசாங்கத்தின் எண்ணக் கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி  அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக, 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள்.
இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது.
 நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச்  சுத்திகரிப்பு போது நீரிலிருந்து அதிக   உப்புகளை நீக்குகிறது. நனோ  சுத்திகரிப்பின் மூலம்  நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும்   ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும்  நீக்கப்படும்.
முனீரா அபூபக்கர்
2024.03.31
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.