மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் நிலவுவதால், அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ்
இலங்கை காவல்துறையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன மலையகத்தை பொருத்தமட்டில் பல இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.அது மட்டுமன்றி மலையக போலிஸ் நிலையங்களிலேயே அதிக அளவில் வெற்றிடங்களும் காணப்படுகின்றது. ஆகவே நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மலையக பொலிஸ் நிலையங்களிலேயே நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்
