ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தெல்தோட்டை நூல்கந்தூர பகுதியில் நேற்று இரவு பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது,
ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிவோரை ஏற்றி செல்லும் தனியார் பேரூந்து நேற்று இரவு நூல்கந்தூர பகுதியில் வைத்து பாளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பிரண்டு உள்ளது.
பஸ்ஸில் பயணித்த இரு பெண்களும் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரு பெண்கள் நேற்று இரவே பேராதெனிய வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் செய்துள்ளனர்,
பஸ்ஸில் பயணித்த பெண்கள் கூறியுள்ளனர் சாரதி தொடர்ந்து தொலைபேசி மூலமாக பேசிகொண்டு வந்த காரணமாக இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது என்று பிரதேச மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
