மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 40 அடி குறைந்து உள்ளது.
இதனால் 1969 ம் ஆண்டு காலப் பகுதியில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்கம் தலங்கள் தற்போது வெளியில் தெரிகிறது.
குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், புத்தரின் சிலை, இஸ்லாமிய பள்ளியின் தூபி, கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம், பௌத்த விகாரை பகுதியில் இருந்த அரச மரம் பகுதி,பலைய பாலங்கள் என்பன அடங்கும்.
தொடர்ந்து வரட்ச்சியான காலம் தொடரும் பட்சத்தில் மலையக பகுதிகளில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
சியத்த கங்குல ஓயா,மரே ஓயா, காட்மோர் ஓயா, சாமிமலை ஓயா, என்பன நீர் வரத்து இல்லாமல் வரண்ட நிலையில் உள்ளது.
மஸ்கெலியா செய்தியாளர்.செ.தி.பெருமாள்.11.04.2024
