மினுவாங்கொடை தேசிய புது வருட கொண்டாட்டம் நாளை (27) மினுவாங்கொடை அலிஸ்பார்க் மைதானத்தில் நாள் முழுவதும் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்திற்கான ஆண்களுக்கான திறந்த சைக்கிள் ஓட்டப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலிஸ்பார்க் மைதானம் அருகே காலை 6.30 மணிக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக எழுபத்தைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும், பத்தாம் பரிசு வரை இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்க ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அழகு ராணி தெரிவு, மாரதன் பந்தயப் போட்டி, கயிறு இழுத்தல், சறுக்கு மரம், தலையணை சண்டை என பல போட்டிகள் நடைபெறும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் எண்ணக்கருவுக்கமைய, மினுவாங்கொடை பிரதேச செயலகம், மினுவாங்கொடை பிரதேச சபை, மினுவாங்கொடை பிரதேச அரச நிறுவனங்கள் மற்றும் மினுவாங்கொடை பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பிரபல பாடகர்கள் பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முனீரா அபூபக்கர்
