Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

September 21, 2026

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

September 21, 2026

பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » யாழ். காரைநகர் – அருள்மிகு ஈழத்துச் சிதம்பரம் சிவன் திருக்கோயில்
கோவில்

யாழ். காரைநகர் – அருள்மிகு ஈழத்துச் சிதம்பரம் சிவன் திருக்கோயில்

ThanaBy ThanaJanuary 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- காரைநகர் அருள்மிகு ஈழத்துச் சிதம்பரம் சிவன் திருக்கோயில்

நம்பியுன்னைச் சரணடையுமெங்கள் நலன் காக்கும் பெருமானே
நாளும் பொழுதும் அருகிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
நித்தம் உனைத் தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

சௌந்தராம்பிகை அன்னையுடன் உறையும் எங்கள் பெருமானே
சத்தியத்தை நிலைநிறுத்தக் கருணை செய்ய வேண்டுமைய்யா
சித்தத்தில் உனையிருத்தித் தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

காரைநகர் நற்பதியில் கோயில் கொண்ட பெருமானே
காலமெல்லாம் உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
பற்றி உந்தன் தாள் பணியும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

ஆண்டிலிரு திருவிழாக்கள் காணுகின்ற பெருமானே
ஆதரவு தந்தெமக்கு உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
ஆறுதலை நாடி உன்னடி தொழும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

கங்கையம்மை முடிகொண்டு காத்தருளும் பெருமானே
கவலையில்லா நிலைதந்து உடனிருந்து கருணை செய்ய வேண்டுமைய்யா
நிம்மதியை நாடி உந்தன் அடி பற்றிநிற்கும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா

ஐயனார் திருக்கோயில் அருகு கொண்ட பெருமானே
அச்சம் இல்லா நிம்மதிக்குக் கருணை செய்ய வேண்டுமைய்யா
அரவணைப்பை நாடி அடிபணியும் எங்களுக்கு அருளிடைய்யா
ஈழத்துச் சிதம்பரத்தில் உறைகின்ற சிவனே எமைக் காத்திடைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.