மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.
மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உறுமய வேலைத் திட்டத்திற்கு இணைந்த வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்தார்.
