மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் 01 கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான எஸ். சத்யானந்த மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கைக்கான சர்வதேச மாநாட்டின் படி கண்ணிவெடி அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செயல்முறையை வெற்றிகரமாக நிர்வகிப்பதில் பெற்ற அனுபவம் மற்றும் அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக எஸ். தல்சத்யானந்தா தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சதுர கி.மீ. 3000க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த 03 வருடங்களில் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமெனவும் சத்தியானந்த மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது இலங்கை இராணுவத்தால் Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இலங்கை இராணுவம் அதனை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் வீடமைப்பு பணிப்பாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற இலங்கை எடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்து மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியதாமேலும் தெரிவித்தார்.
மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றும் நாட்டின் தேசிய நடவடிக்கைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்ததாக எஸ். சத்யானந்தா கூறினார்.
முனீரா அபூபக்கர்
2024.05.05
