உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல பிரதிபலன்களை வழங்கும் வகையில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டம் வேலைத்திட்டம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் (03)காலை புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது.
அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு பல பிரதிபலன்கள் இதன்மூலம் கிடைப்பதுடன் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் தமது தொழில் கனவுகளை நனவாக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் வருகை தந்துள்ளன. இதற்கிடையில், இஸ்ரேலிய வேலைகளுக்கான பதிவு செய்யும் வேலைதிட்டமும் நடைபெற்றதுடன் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலை தேடும் அனைவரும் இங்கு பதிவு செய்துக்கொண்டனர்.
