நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ” சூரிய உதய புதுவருட கொண்டாட்டம்” நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் பத்தரமுல்ல, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அதிகாரசபையின் மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் முட்டி உடைத்தல், தலையணை போட்டி, குறி பார்த்து சுடுதல், யானைக்கு கண் வைக்கும் போட்டி, நடனம், பறை அடித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த தில்கி குலசூரிய நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புதுவருடத்திற்கான அழகுராணியாக வெற்றிபெற்றார். பிரதிப் பணிப்பாளர் அலுவலக வலயம் 11 யைச் சேர்ந்த ஹிமாஷா தில்மி ரணதுங்க, சொத்து அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த குஷானி மதுசிகா ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
