பண்டாரவளை உடுஹுல்பொத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதுடைய டேனிலி யா என்டெல் என்ற அமெரிக்க பிரஜையே இவ்வாறு காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவத்தினால் அவரது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
