பெருந்தோட்ட தொழிலாளர் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மூவர் கைது.
இரத்தினபுரி கிரியெல்ல தும்பறை தோட்டத்தில் தொழிலாளர்கள் கணவன் மனைவி
இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தோட்டத்தின் பிரதி முகாமையாளர் உட்பட மூவர் இன்றையதினம் கிரியெல்ல காவல் நிலையத்தில் முன்னிலையில் ஆனார்கள்.இவர்களை கைது செய்து இரத்தினபுரி நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்தியுள்ளனர்.
இரத்தினபுரி கிரியெல்ல தும்பறை தோட்டத்தில் தொழில் புரிந்து வந்த கணவன் மற்றும் மனைவி இருவர் கடந்த சில தினங்களாக தொழிலுக்கு செல்லவில்லை என்பதால் இவர்களை மீண்டும் கடந்த தொழிலுக்கு வருமாறு அழைத்து மூன்று தினங்களுக்கு முன் குறித்த தொழிலாளர்கள் தோட்டத்தின் பிரதி முகாமையாளர் உட்பட மூவர் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டமை குறிப்பிட்ட தக்கது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கிரியெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன்
தொலைபேசி மூலம் உரையாடி குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து குறிபிட்ட மூவரும் கிரியெல்ல காவல் நிலையத்தில் ஆஜர் ஆனபிறகு இவர்களை கைது செய்து இரத்தினபுரி நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.
