லுணுகலை ஜனதாபுர, தம்பபிட்டிய வத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் (19) பிற்பகல் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை, ஜனதாபுர, தும்பபிட்டிய வத்தவில் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
நேற்று மாலை 03 மணியளவில் குளிப்பதற்கு தனது 11 வயது மகனுடன் கும்புக்கன் ஓயாவுக்குச் சென்ற குறித்த பெண் தனது மகனை குளிபாட்டிய பின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் தனது தாயின் அலறல் சத்தம் கேட்டு 17 வயதுடைய குறித்த பெண்னின் மகள் தனது தாய் குளித்த இடத்திற்கு சென்று பார்த்த போது
தாய், தலையில் காயங்களுடன் தண்ணீரில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரிடம்
தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
