இன்று (13) மாலை 3.30 மணியளவில் மலையகப் புகையிரதத்தில் வட்டகொட மற்றும் தலவாக்கலை நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த 1008 என்ற அதிவேக பயணிகள் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
