தலவாக்கலை பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம் நேற்று ( 04)இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மின்னொழுங்கினன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
லயன் இலக்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது இதன் போது 3 வீடுகள் முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
கிராம மக்களின் முயற்சியினால் ஒரு சில மணிநேரங்களில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதோடு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கெளசல்யா



