வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த பெண் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் கிரிந்தி ஓயா பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்த போதே சிறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்சோலை பொல்கஹட்டான பகுதியில் வசிக்கும் பெண், ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அந்த பெண்ணை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
