இந்திய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் 9வது இறுதிப்போட்டியில் இலங்கை அணி மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.இந்திய அணிக்கு எதிராக இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிரித்தி மந்தனா அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிஷா திஹாரி 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தர்.