அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டிகள் 2024
மத்திய மாகாணப் போட்டிகள்
நவநீதன்
மத்திய மாகாண தமிழ் மொழித் தினப்போட்டிகளின் இரண்டாம் கட்டமான தனி மற்றும் குழுப் போட்டிகள் எதிர்வரும் 2024.09.07,08 ஆம் திகதிகளில் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் நடைபெறுமென
மத்திய மாகாணக் கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு இத்தகவல்களை வழங்குவதோடு போட்டியாளர்களுக்கு மாகாண திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற அடையாள இலக்கங்களை பெற்றுக்கொடுத்து போட்டிகளில் கலந்து கொள்ள வழிப்படுத்துமாறு
மாகாணக் கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன் வலய மட்டங்களில் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவான போட்டியாளர்களின் பாடசாலை அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
