மஸ்கெலியா -லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியில் நேற்று இரவு கம்பியில் சிக்கிய புலியை மீட்கும் பணியில் நல்லதண்ணி வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் சிறுத்தை சிக்கிய நிலையில் இருப்பது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்க்கு தெரிவித்தனர்.
பொலிசார் உடன் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வர வன பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
