தேசிய மக்கள் சக்தி இலங்கை பூராகவும் தம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நிலவரத்தின் படி 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறான ஒரு நிலைமையை அவர்களுக்கு காணப்பட்டது.
தற்பொழுது மக்கள் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு வரும் ஒரு சூழ்நிலையே காணப்படுவது எங்களுக்கு அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
ஆகவே எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும். அத்தோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் வாக்கு வங்கிகள் குறைவடைந்து செல்வதை எங்களுக்கு கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் குறைவான பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
அத்தோடு தீபாவளி காலப்பகுதியில் பொருட்கள் சேவைகள் விலை அதிகமாக காணப்படுகிறது,
அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்வதாக தெரிகிறது.
அத்தோடு தேங்காய் விலை அதிகரித்துள்ளது.
இதனால் கோவில்களில் பூஜைக்கு வழங்கக்கூடிய காளாஞ்ஜி வழங்க முடியாத ஒரு சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது.
அத்தோடு பலகாரம் செய்யக்கூடிய விடயங்கள் மற்றும் அரிசி பருப்பு, உளுந்து பயரு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்று தட்டுப்பாடு உள்ள நிலைமையிலும் அதிக கூடிய விலை விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
