Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நெல்,சோளம் செய்கைக்காக யூரியா உரம் – பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை
இலங்கை

நெல்,சோளம் செய்கைக்காக யூரியா உரம் – பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை

ThanaBy ThanaFebruary 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எதிர்வரும்சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது, உர மற்றும் வர்த்தக உர நிறுவனங்களுக்;கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதனைத் தவிர, மேலும் 25 ஆயிரம்மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கென பத்து பில்லியன்ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒருலட்சம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்துக் கொண்டு, சிறுபோகத்தில்நெல், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான யூரியா உரம் பகிர்ந்தளிப்பது நோக்கமாகும். சிறுபோக நெற் செய்கைக்காக சேதனப் பசளை, பண்டி, யூரியா உர வகைகளை,தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவது விவசாய அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

ஆரம்ப உரமான சேதனப் பசளை, சிறுபோகத்தின் ஆரம்பத்திலேயே விவசாயிகளின் தேவைக்கேற்ப,முழுமையாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. 36ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் இந்த மாத நடுப்பகுதியில் துறைமுகத்தைவந்தடையவுள்ளது.

மேலதிகமாக, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பண்டி உரம், உரநிறுவனத்திடம் காணப்படுகிறது. அதன்படி, சிறுபோகத்தில் நெல் வயல்களுக்கு தேவையானஉரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரமேலும் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.