Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலக அயலகத் தமிழர் தின மாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா செல்லும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இலங்கை

உலக அயலகத் தமிழர் தின மாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா செல்லும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ThanaBy ThanaJanuary 10, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Pradeep
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெறவுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நாளை (10-01-2025) இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்கின்றார். இந்த விஜயத்தின் போது அமைச்சர் அவர்களின் ஆலோசகரும், பிரத்தியேக செயலாளருமான கலாநிதி P.P சிவபிரகாசம் அவர்களும் இணைந்து கலந்துக்கொள்ள உள்ளார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்மிரு நிரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனவரி 11 மற்றும் 12 திகதிகளில் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ள உலக அயலகத் தமிழர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருநாள் விஜயத்தை மேற்கொண்டு விழாவில் உரையாற்றவும் உள்ளார். இதன் போது இலங்கை மலையக மக்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்க இருப்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேற்படி விஜயத்தின் போது தமிழக மாண்மிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களையும் மற்றும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், இலங்கை மலையக மக்கள் குறித்த நலன் விரும்பிகள் ஆகியோரை சந்தித்து இலங்கை வாழ் மலையக மக்களின் பிரச்சனைகள், மலையக மக்களின் அபிவிருத்தி சமூக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதும் சிறப்பம்சமாகும்.

இரு நாள் நிகழ்வுகளாக இடம்பெறும் உலக அயலகத் தமிழர் தின நிகழ்வுகளை தமிழ் நாடு அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதோடு 11 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விழாவில் தமிழ் நாட்டின் மாண்மிகு துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்வு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேரூரை ஆற்றவுள்ளதோடு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

12 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வின் போது மாண்மிகு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக அயலகத் தமிழருக்கான விருந்துகளை வழங்கி வைத்து பேருரை ஆற்றவுள்ளார். இவ் விழாவிற்கு இலங்கை, இந்தியா, மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாண்மிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். உலகெங்கிலும் வாழும் சாதனைத் தமிழர்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.

அமைச்சின் ஊடக பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.