Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

November 23, 2026

மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
Breaking

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ThanaBy ThanaNovember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தித்த்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரை முறையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த மக்கள் போராட்ட முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில், வசந்த முதலிகே தலைமையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நுவரெலியா நகரில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, நுவரெலியா பேருந்து நிலையம் மற்றும் நுவரெலியா மத்திய சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் பிரதிநிதி வசந்த முதலிகே, தித்த்வா புயலினால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருட காலமாகியும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடுகள் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், வாடகை வீடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மாத்திரமே வாடகை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நிவாரணங்கள் கூட முறையாகக் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும், இதனால் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைவாக வழங்குதல், நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ஆம் திகதி நுவரெலியாவில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026
    Editors Picks

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026

    ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

    November 23, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.