கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
