Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

August 15, 2026

அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

August 15, 2026

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-பழனி திகாம்பரம்
இலங்கை

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-பழனி திகாம்பரம்

ThanaBy ThanaFebruary 24, 2025Updated:February 24, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி என்பவற்றின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், ஹட்டன் டிகேடபிள்யூ மண்டபத்தில் நேற்று(23)  நடைபெற்றது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

உள்ளாட்சிசபைத் தேர்தல், தற்போதைய அரசியல் நடப்புகள் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இச்சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு,

‘ உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு நாம் தயாராகி வருகின்றோம். இது சம்பந்தமாக தோட்டத் தலைவர்கள் உட்பட கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடினோம்.

தற்போதைய அரசாங்கம் வாய்வீச்சு அரசாங்கமாகவே உள்ளது. செயலில் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

மலையக மக்கள் கடந்தமுறையும் தேசிய மக்கள் சக்திக்கு 50 ஆயிரம்வரையான வாக்குகளையே வழங்கினார். மலையகத்திலுள்ள கட்சிகளுக்குதான் கடந்தமுறையும் வாக்குகளை வழங்கினார்கள்.

மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்றார்கள், எதிரணியில் இருக்கும்போது மலையக மக்கள் தொடர்பில் அதிகம் கதைத்தார்கள். தற்போது அதிகாரத்தில் இருக்கும்போது தீர்வை முன்வைக்காமல் உள்ளனர்.

வரவு – செலவுத் திட்டத்தில்கூட மலையகத்தக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில்கூட இந்திய நிதியே பெருமளவு உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுகூட கைகூடுமா என தெரியவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவதன்மூலமே இந்த சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடியும்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.