Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

August 31, 2026

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம்
இலங்கை

வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம்

ThanaBy ThanaFebruary 27, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

தற்போது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 06 பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமைக்குட்பட்டதாக இருப்பதுடன், குறித்த சனத்தொகையில் 95.3% வீதமானவர்கள் கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.

இலங்கையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமையொழிப்பு வேலைத்திட்டங்களின் இறுதிப் பெறுபேறுகள் பற்றி எந்தவொரு தரப்பினரும் திருப்தியடையவில்லை என்பதைக் கருத்துக்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக வறுமையொழிப்பு நலனோம்புகை வேலைத்திட்டங்கள் மூலம் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையும், அதற்காக செலவிடப்பட்டுள்ள நிதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் பயனாளிகளும், 2010 ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் பயனாளிகளாக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் பயனாளிகள் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலைமையை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயன்முறைக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இடர்களுக்கு உள்ளாகக்கூடிய குழுவினரை மாத்திரம் முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்கும், ஏனையவர்களை பொருளாதாரச் செயன்முறையில் முனைப்பான பங்காளர்களாக மாற்றுவதற்கும் படிப்படியாக முறையாகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கிணங்க, புதிய அரசின் கொள்கைக்கமைய ‘வளமான நாடு – செழிப்பான வாழ்க்கை’ எனும் தொலைநோக்கை வெற்றியடையச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் பல்வித அணுகுமமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.

  • Next article: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 02 இலிருந்து 08 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரம்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.