கொழும்பு – குருநாகல் வீதி, நால்ல மஞ்சிக்கடை சந்திக்கு அருகில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ. போ .ச பேருந்தும், மணல் சலவை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
