தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு புறப்படும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை புகையிரதத் திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன ஒருங்கிணைந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
அதன்படி மகரகம, புத்தளம், ஹை லெவல்/ லோ லெவல், தம்புள்ள மற்றும் காலி போன்ற பிரதான ஐந்து நுழைவாயில்களை மையப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக தூர சேவை பஸ் சேவைகள் செயல்படுத்தப்படுவதுடன் வழமையான நேர அட்டவணையின் படி செல்லும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக 500 பயணச் சுற்றுகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம், கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை, கண்டி மற்றும் காலி போன்ற பிரதேசங்களுக்கு சாதாரண நேர அட்டவணைக்கு மேலதிகமாக விசேட புகையிரத சேவைகளை ஈடுபடுத்துவதாக அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறே மாகும்புற, கடவத்தை, கடுவளை மற்றும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை ஆகியவற்றை மையப்படுத்தி அதிவேக நெடுஞ்சாலை ஊடாக காலி, மாத்தறை, பதுளை தங்கல்லை, கதிர்காமம் போன்ற இடங்களுக்காக மேலதிக பஸ் சேவைகள் 350 சுற்றுக்களில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் கிராமங்களை நோக்கி பயணிப்பதற்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரப் பிரதேச பஸ் தரிப்பிடங்களுக்கு 8 இலட்சம் அளவிலான பிரியாணிகள் வருகை தந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எதிர்பார்க்கப்படுகிறது.

